TNPSC Thervupettagam

தொழில் துறை உறவுகள் தொடர்பான தொழிலாளர் குறியீடு 2019

November 22 , 2019 2025 days 1170 0
  • 2019 ஆம் ஆண்டின் தொழில் துறை உறவுகள் தொடர்பான தொழிலாளர் குறியீட்டிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • எந்தவொரு கால அளவிற்கும் நிலையாக நிர்ணயிக்கப்பட்ட ஒரு கால ஒப்பந்தத்தில் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த நிறுவனங்களை இது அனுமதிக்கின்றது.
  • நிர்ணயிக்கப்பட்ட கால வேலைவாய்ப்பிற்கான சட்டக் கட்டமைப்பை வழங்க இந்த மசோதா முன்மொழிகின்றது.
  • புதிய விதிகளின் கீழ், அதேப் பிரிவில் பணியாற்றும் வழக்கமான தொழிலாளர்கள் பெறும் சட்ட ரீதியான சமூகப் பாதுகாப்புச் சலுகைகளை நிர்ணயிக்கப்பட்ட பதவிக் காலத்தில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களும் பெற இருக்கின்றனர்.
  • 100 தொழிலாளர்களைக் கொண்ட தொழிற்சாலைகள் பணியாளர்களைப் பணி நீக்கம் செய்வதற்கு அல்லது தொழிற்சாலைகளை மூடுவதற்கு அரசாங்கத்தின் அனுமதியைப் பெற வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்