மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திரசிங் தோமர் அவர்கள் 53 தோட்டக்கலைத் தொகுப்புகளின் ஒருங்கிணைந்த சந்தை சார்ந்த மேம்பாட்டிற்காக தோட்டக்கலைத் தொகுப்பு மேம்பாட்டுத் திட்டம் ஒன்றினைத் தொடங்கி வைத்துள்ளார்.
வேளாண் அமைச்சகமானது 53 தோட்டக்கலைத் தொகுப்புகளை அடையாளம் கண்டு அவற்றுள் 12 தொகுப்புகளை சோதனைக்குத் தேர்வு செய்துள்ளது.
தோட்டக்கலைத் தொகுப்பு மேம்பாட்டுத் திட்டமானது இந்தியத் தோட்டக்கலை துறையில் நிலவும் உற்பத்தி, உற்பத்திக்கு முந்தைய நிலை, தளவாடங்கள், அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மை, வணிகப்படுத்துதல் மற்றும் சந்தைப் படுத்துதல் போன்றவைத் தொடர்பான அனைத்து முக்கியப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை அளிக்கும்.
இந்தத் திட்டத்தின் மூலம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டப் பயிர்களின் ஏற்றுமதியை 20% வரை உயர்த்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
53 தொகுப்புகளிலும் இந்தத் திட்டம் அமல்படுத்தப்படும் போது ரு.10000 கோடி வரையிலான முதலீடுகளை இது ஈர்க்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.