TNPSC Thervupettagam

தோட்டக்கலை பயிர் மதிப்பீடுகள் 2024-26

March 20 , 2026 11 hrs 0 min 17 0
  • வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் 2024-25 ஆம் ஆண்டிற்கான இறுதி மதிப்பீடுகளையும், 2025-26 ஆம் ஆண்டிற்கான முதல் முன்கூட்டிய மதிப்பீடுகளையும் வெளியிட்டுள்ளது.
  • 2024-25 ஆம் ஆண்டில் மொத்தத் தோட்டக்கலை பயிர்ப் பரப்பளவு 301.36 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது மற்றும் உற்பத்தி 3707.38 லட்சம் டன்களை எட்டி உள்ளது.
  • 2025-26 ஆம் ஆண்டிற்கான உற்பத்தி 3708.46 லட்சம் டன்களாக இருக்கும் என்று கணிக்கப் பட்டுள்ளது.
  • 2024-25 ஆம் ஆண்டில் பழங்களின் உற்பத்தி 1176.49 லட்சம் டன்களாகவும், காய் கறிகளின் உற்பத்தி 2177.97 லட்சம் டன்களாகவும் உயர்ந்துள்ளது.
  • வாழை, மாம்பழம், வெங்காயம், உருளைக்கிழங்கு மற்றும் தக்காளி போன்ற பழங்கள் மற்றும் காய்கறிகளில் முதன்மை உற்பத்தி உயர்வு காணப்பட்டது.
  • மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் மற்றும் மதிப்புச் சங்கிலிகள் காரணமாக நறுமணப் பொருட்கள், மலர்கள் மற்றும் மருத்துவத் தாவரங்களும் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்