TNPSC Thervupettagam

தோம்கார் பாறைக் கலை வளாகம்

April 10 , 2019 2294 days 675 0
  • இந்த வளாகமானது காஷ்மீரில் சிந்து நதிக்கரைக்கு அடுத்துள்ள லே நகரத்தில் உள்ள தோம்கார் கிராமத்தில் அமைந்துள்ளது. இது 500 சிற்ப வேலைகளைக் கொண்டுள்ளது.
  • 2000 மற்றும் 4000 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்டதாகக் கருதப்படும் இது அதிக அளவிலான பாறைகளில் செதுக்கப்பட்ட ஓவியங்களைக் கொண்டுள்ளது.
  • வரலாற்றுக்கு முந்தைய இந்தப் பாறை ஓவியங்களை தனி ஒரு மனிதனாகப் பாதுகாப்பதில் முக்கியக் கருவியாக செயல்பட்ட ஒரு விவசாயியான ஸ்டான்சின் தங்ஜுக் என்பவரது முயற்சியினால் 2012 ஆம் ஆண்டில் இவ்வளாகம் ஏற்படுத்தப்பட்டது.
  • பெட்ரோகில்ப்ஸ் (petroglyphs) என்பது பாறைப் பரப்பின் பகுதியை மறு உருவாக்கம் செய்வது, எடுப்பது, செதுக்குவது மற்றும் அகலப்படுத்துவது ஆகியவற்றின் மூலம் பாறைக் கலை வடிவமாக உருவாக்கப்பட்ட உருவங்களாகும்.
  • இதன் சேதமடைந்த நிலை காரணமாக இது சமீபத்தில் செய்தியில் வந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்