நகராட்சி செயல்பாட்டுக் குறியீடானது (MPI) எளிதில் வாழ்வதற்கான குறியீட்டுடன் சேர்த்து வெளியிடப் பட்டுள்ளது.
இது சேவைகள், நிதி, கொள்கை, தொழில்நுட்பம் மற்றும் நிர்வாகம் ஆகியவற்றில் நகராட்சிகளில் உள்ளாட்சி அரசாங்கங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்யக் கோருகின்றது.
இது உள்ளாட்சி நிர்வாகச் செயல்பாடுகளில் கடினத் தன்மையை மதிப்பீடு செய்யவும் அதனை எளிமைப்படுத்தவும் கோருவதோடு வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புடைமை ஆகியவற்றையும் ஊக்குவிக்கச் செய்கின்றது.
எளிதில் வாழ்வதற்கான குறியீடானது முடிவுகள் அடிப்படையிலான குறிகாட்டிகளை இணைக்கச் செய்யும் வேளையில் நகராட்சி செயல்பாட்டுக் குறியீடானது உள்ளீட்டுக் குறிகாட்டிகள் குறித்த விளக்கங்களை எடுத்துரைக்கின்றது.
MPI – 2020 குறியீடானது நகராட்சிகளின் மக்கள் தொகையின் அடிப்படையில் மில்லியன்+ மக்கள் தொகை கொண்ட நகராட்சிகள் (மில்லியன் மக்கள் தொகைக்கு மேல் கொண்ட நகராட்சிகள்) மற்றும் மில்லியன் மக்கள் தொகைக்கும் குறைவான மக்கள் தொகையைக் கொண்ட நகராட்சிகள் என வகைப்படுத்துகின்றது.
மில்லியன்+ பிரிவில், இந்தூர் நகராட்சியானது முதலிடத்தில் தரவரிசைப் படுத்தப் பட்டுள்ளது. அதற்கடுத்து சூரத் மற்றும் போபால் ஆகிய நகராட்சிகள் தரவரிசைப் படுத்தப் பட்டுள்ளன.
மில்லியனுக்கும் குறைவான மக்கள் தொகையைக் கொண்ட பிரிவில், புது தில்லி நகராட்சி ஆணையமானது முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதற்கடுத்து திருப்பதி மற்றும் காந்தி நகர் ஆகிய நகராட்சிகள் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளன.