நகரும் வகையிலான சுரங்கப்பாதை நன்னீர் வாழ் உயிரின காட்சியகம்
July 12 , 2021 1597 days 671 0
பெங்களூரு நகரின் இரயில் நிலையமானது இந்தியாவின் முதலாவது நகரும் வகையிலான சுரங்கப் பாதை நன்னீர் வாழ் உயிரினக் காட்சியகத்தை (movable freshwater tunnel aquarium) கொண்டுள்ளதாக மாறியுள்ளது.
இந்த அதி நவீன நீர்வாழ் உயிரினக் காட்சியகமானது இந்திய இரயில்வே நிலைய மேம்பாட்டுக் கழக நிறுவனம் மற்றும் HNi அக்வாட்டிக் கிங்டம் எனும் அமைப்பு ஆகியவற்றால் இணைந்து உருவாக்கப்பட்டது.
பெங்களூரு நகர இரயில் நிலையமானது கிராந்திவீர சங்கொலி ராயண்ணா ரயில்வே நிலையம் எனவும் அழைக்கப்படுகிறது.
இது அமேசான் நதியின் வடிவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.