நகர்ப்புறக் கூட்டுறவு வங்கிகளுக்கான புதிய டிஜிட்டல் செயலிகள்
November 16 , 2025 55 days 145 0
மத்திய அரசானது, புது டெல்லியில் நடைபெற்ற ஒரு சர்வதேச மாநாட்டில் நகர்ப்புறக் கூட்டுறவு வங்கிகளுக்கு (UCB) சஹாகர் டிஜி பே மற்றும் சஹாகர் டிஜி கடன் ஆகிய செயலிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
சஹாகர் டிஜி பே ஆனது கூட்டுறவு வங்கி உறுப்பினர்களுக்கு காகிதமில்லா மற்றும் வேகமான டிஜிட்டல் பண வழங்கீடுகளை மேற்கொள்ள வழிவகை செய்கிறது.
சஹாகர் டிஜி கடன் செயலி கடன் பெறுவதற்கான தடையற்ற அணுகலை எளிதாக்கச் செய்கிறது.
இந்தச் செயலிகள் சுமார் 9 கோடி வைப்புத்தொகையாளர்கள் மற்றும் கடன் வாங்குபவர்களுக்கான செயல்பாடுகளை நவீனமயமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
இது நிதி உள்ளடக்கத்தினை மேம்படுத்துகிறது மற்றும் இரண்டு ஆண்டுகளுக்குள் 1,500 வங்கிகளில் இந்த வசதியினை கொண்டு சேர்க்கிறது.