நகர்ப்புறக் கூட்டுறவு வங்கிகளை உட்சேர்ப்பதற்கான திருத்தப்பட்ட தகுதி விதிமுறைகள்
February 7 , 2024 521 days 362 0
1934 ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டத்தின் இரண்டாவது அட்டவணையில் நகர்ப்புறக் கூட்டுறவு வங்கிகளைச் சேர்ப்பதற்கான தகுதி விதிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் திருத்தியமைத்துள்ளது.
தகுதியான நகர்ப்புறக் கூட்டுறவு வங்கிகள் ஆனது, நகர்ப்புறக் கூட்டுறவு வங்கிகளுக்குப் பொருந்தக் கூடிய குறைந்தபட்சத் தேவையை விட கூடுதலாக குறைந்த பட்சம் 3% வரையிலான இடர் உண்டாக்கும் சொத்துக்கள் மீதான மூலதன விகிதத்தை (CRAR) கொண்டிருக்க வேண்டும்.
கூடுதலாக, அவற்றிற்கு எந்தவொரு பெரிய ஒழுங்குமுறை மற்றும் மேற்பார்வை சிக்கல்கள் இருக்கக் கூடாது.