₹1 லட்சம் கோடி மத்திய உதவியுடன் நகர்ப்புறச் சவால்கள் நிதியை (UCF) தொடங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த நிதி முதன்முதலில் 2025–26 மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது மற்றும் ஐந்து ஆண்டுகளில் ₹4 லட்சம் கோடி மொத்த முதலீட்டைத் திரட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது நிதியாண்டு (FY) 2025–26 முதல் நிதியாண்டு 2030–31 வரை செயல்படும் என்ற ஒரு நிலையில்மேலும் இது நிதியாண்டு 2033–34 வரை நீட்டிக்கப்படலாம்.
இந்தத் திட்டம் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நகரங்கள், அனைத்து மாநிலத் தலைநகரங்கள் மற்றும் 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட முக்கிய தொழில்துறை நகரங்களை உள்ளடக்கும்.
இது நகரங்களை வளர்ச்சி மையங்களாகவும், ஆக்கப்பூர்வமான மறுமேம்பாடு மற்றும் நீர் மற்றும் சுகாதார உள்கட்டமைப்பாகவும் மாற்றுவதில் கவனம் செலுத்துகிறது.
இதன் திட்டச் செலவில் 25% என்ற அளவை மைய அரசு வழங்கும் என்பதோடுகுறைந்த பட்சம் 50% சந்தை மூலங்களிலிருந்து திரட்டப்பட வேண்டும் என்ற நிலையில்மீதம் உள்ள 25% அளவை மாநிலங்கள் அல்லது நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (ULBs) பங்களிக்கும்.