நகர்ப்புற உள்கட்டமைப்பு குறித்த தெற்காசிய பிராந்திய மாநாடு
November 19 , 2018 2454 days 704 0
“நகர்ப்புற உள்கட்டமைப்பு: அரசு மற்றும் தனியார் கூட்டு மற்றும் நகராட்சிக் கழகத்தின் நிதியியல் புத்தாக்கங்கள்” குறித்த தெற்காசிய மண்டல மாநாடு புதுடெல்லியில் நடைபெற்றது.
இது நிதி ஆயோக் அமைப்பால்
ஆசிய மற்றும் பசிபிக்கிற்கான ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக ஆணையம் (UNESCAP - United Nations Economic and Social Commission for Asia and the Pacific) மற்றும்
ஆசிய மேம்பாட்டு வங்கி (ADB - Asian Development Bank)
ஆகியவற்றுடன் கூட்டிணைந்து நடத்தப்பட்டது.
இந்த மாநாடானது நகர்ப்புற உள்கட்டமைப்பின் கண்ணோட்டங்கள் மற்றும் அடுத்த கட்டங்கள் குறித்த முக்கிய பிரச்சினைகளைப் பற்றி விவாதித்தது.
தெற்காசிய பிராந்தியங்களின் பங்கேற்புகளுடன் தெற்காசிய பிராந்திய மாநாடு நடைபெறுவது இதுவே முதன்முறையாகும்.