TNPSC Thervupettagam

நகர எரிவாயு விநியோக வலையமைப்பு

March 14 , 2026 2 days 56 0
  • பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் நகர்ப்புற எரிவாயு விநியோகத் திட்டத்திற்குப் (CGD) பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
  • இத்திட்டம் நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் செயல்படுத்தப்படும்.
  • சுமார் ஒன்பது லட்சம் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்குக் குழாய் மூலம் இயற்கை எரிவாயு (PNG) வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • CGD என்பது வீடுகள், தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களுக்கு நிலத்தடி குழாய்கள் மூலம் இயற்கை எரிவாயுவை வழங்கும் ஒரு வலையமைப்பாகும்.
  • நிலக்கரி மற்றும் டீசல் போன்ற மரபுசார் எரிபொருட்களுடன் ஒப்பிடும்போது இயற்கை எரிவாயு ஒரு தூய்மையான எரிபொருளாகக் கருதப்படுகிறது.
  • சென்னையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) நிறுவனத்தின் உயவுப்பொருள் கலவை ஆலையைப் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
  • இது உலகின் மிகப்பெரிய உயவுப்பொருள் கலவை ஆலைகளில் ஒன்றாகக் கருதப் படுகிறது என்பதோடு இது இறக்குமதிச் சார்பைக் குறைத்து, பல்வேறு தொழில் துறைகளுக்குத் தேவையான உயவு எண்ணெய்களை வழங்கும்.
  • அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் நெடுஞ்சாலை புறவழிச்சாலை அமைப்பதற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்