காதி மற்றும் கிராமத் தொழில்துறை ஆணையமானது காஜியாபாத்தில் உள்ள சிரோரா கிராமத்தில் நாட்டிலேயே முதல் முறையாக நடமாடும் தேன் பதப்படுத்துதல் வாகனத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த நடமாடும் வாகனமானது, அரியானாவின் பஞ்சோகெஹ்ராவில் உள்ள காதி மற்றும் கிராமத் தொழில்துறை ஆணையத்தின் பல்துறைப் பயிற்சி மையத்தில் வடிவமைக்கப் பட்டுள்ளது.
இந்த நடமாடும் தேன் பதப்படுத்துதல் அலகில் 8 மணி நேரத்தில் 300 கிலோ தேனைப் பதப்படுத்த முடியும்.
இந்த வாகனத்தில் தேனின் தரத்தை உடனடியாகப் பரிசோதித்து ஆராயும் வகையிலான ஒரு சோதனைக் கூடமும் அமைக்கப் பட்டுள்ளது.