TNPSC Thervupettagam

நடுவண் மன்றத் தீர்ப்புகளை மாற்றியமைப்பதற்கு வேண்டி வரையறுக்கப்பட்ட அதிகாரம்

May 5 , 2025 526 days 406 0
  • மேல்முறையீட்டு நீதிமன்றங்கள் ஆனது, நடுவர் மன்ற தீர்ப்புகள், 1996 ஆம் ஆண்டு நடுவண் மற்றும் இசைவுச் சட்டத்தின் கீழான அதிகாரங்களைப் பயன்படுத்தி, நடுவர் மன்றத் தீர்ப்புகளை மாற்றியமைக்க முடியும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது.
  • இந்த நீதிமன்றங்கள் ஆனது, சட்டத்தின் 34 மற்றும் 37வது பிரிவுகளின் கீழ் நடுவண் தீர்ப்புகளை மாற்றியமைப்பதற்கு என "வரையறுக்கப்பட்ட அதிகாரத்தை" கொண்டு உள்ளன.
  • அந்த நீதிமன்றத்தினால் செய்யப்பட்ட மாற்றங்கள் ஆனது, ஒரு தீர்ப்பின் படியான செல்லுபடியாகாத பகுதியை அதன் செல்லுபடியாகும் பகுதியிலிருந்து துண்டிக்கவோ அல்லது தீர்ப்பில் உள்ள வெளிப்படையான தட்டச்சு சார், கணக்கீட்டு சார், எழுத்துப் பிழைகளை அகற்றவோ அல்லது அத்தீர்ப்பிற்குப் பின்னதாக கருத்து மாற்றப்பட வேண்டியிருந்தால் இதை மேற்கொள்ளவோ அனுமதிக்கப்பட்டன.
  • உண்மைத் தகவல் சார் பிழைகளைச் சரி செய்ய, செலவுகளை மறுபரிசீலனை செய்ய அல்லது நடுவர் மன்றத் தீர்ப்பின் தகுதிகளை மதிப்பாய்வு செய்ய நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்