நடுவர் தீர்ப்பாயம் மற்றும் சமரசச் சட்டம் -1996 மீதான திருத்தம்
February 18 , 2020 2089 days 1798 0
மத்திய அரசானது நடுவர் தீர்ப்பாயம் மற்றும் சமரசச் சட்டம், 1996 என்பதனை நடுவர் தீர்ப்பாயம் மற்றும் சமரச (திருத்த) சட்டம், 2015 என்பதன் மூலம் திருத்தியுள்ளது.
இது நடுவர் செயல்முறையானது சீரான முறையில் நடைபெறுவதையும் செலவு குறைந்ததாகவும் வழக்கை விரைவாக விசாரித்து முடிப்பதையும் நடுவரின் நடுநிலைத் தன்மையை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தத் திருத்தமானது இந்தியாவின் ஒரு சுயாதீன நிறுவன நடுவர் தீர்ப்பாய ஆணையத்தை உருவாக்க வழிவகை செய்கின்றது.
இது உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்றத்தில் பணியாற்றும் நீதிபதிகள் நியமிக்கப்படுவதற்குப் பதிலாக உச்ச நீதிமன்றம்/உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட “நடுவர் நிறுவனங்களால்” நடுவர்களை நியமிக்க அனுமதிக்கிறது.