TNPSC Thervupettagam

நன்னீர் மீன் - லேபியோ காகே

May 20 , 2026 6 days 70 0
  • இந்திய வேளாண் ஆராய்ச்சி சபை - தேசிய மீன் மரபணு வளப் பணியகத்தின் (ICAR-NBFGR) அறிவியலாளர்கள், கர்நாடகாவின் காவேரி ஆற்றுப் படுகையில் 'லேபியோ காகே' என்று பெயரிடப்பட்ட ஒரு புதிய நன்னீர் மீன் இனத்தைக் கண்டறிந்துள்ளனர்.
  • இந்த மீன் மாண்டியா மாவட்டத்தில் உள்ள காவேரி ஆற்றின் சிவசமுத்திரம் பகுதியில் கண்டறியப்பட்டது.
  • இந்த மீனின் அடர் கருப்பு நிறத்தைக் குறிக்கும் வகையில், காகத்தைக் குறிக்கும் 'காகே' என்ற கன்னட வார்த்தையிலிருந்து இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.
  • உள்ளூரில் இந்த மீன் “காகே மீனு” என்று அழைக்கப்படுவதுடன் இது மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படும் அடர் நிறமுடைய லேபியோ இனத்தைச் சேர்ந்ததாகும்.
  • அறிவியலாளர்கள் 2025 ஆம் ஆண்டில் கேரளாவில் 'லேபியோ செகிடா' மற்றும் 'லேபியோ உரு' ஆகிய மீன் இனங்களையும் கண்டறிந்துள்ளனர்.
  • இந்த ஆய்வு, 1870 ஆம் ஆண்டில் முதன்முதலில் விவரிக்கப்பட்ட "இருண்ட லேபியோ" என்று அழைக்கப்படும் 'லேபியோ நிக்ரெசென்ஸ்' மீனின் அடையாளத்தை தெளிவு படுத்தியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்