நமஸ்தே ஓர்ச்சா திருவிழா 2020 - மத்தியப் பிரதேசம்
December 16 , 2019
1983 days
781
- மத்தியப் பிரதேச மாநில சுற்றுலாத் துறையானது 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஓர்ச்சாவில் ‘நமஸ்தே ஓர்ச்சா 2020’ என்ற கலாச்சார விழாவினை ஏற்பாடு செய்ய உள்ளது.
- மத்தியப் பிரதேச சுற்றுலாத் துறையை ஓர்ச்சா மூலமாக மேம்படுத்துவதும், குறிப்பாக சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதும் இதன் நோக்கமாகும்.
- ஓர்ச்சா என்பது பண்டேல்கண்ட் பிராந்தியத்தில் உள்ள ஒரு நகரமாகும்.
- தேசியச் சுற்றுலா விருதுகளில் 2017-18 ஆம் ஆண்டிற்கான சிறந்த பாரம்பரிய நகரத்திற்கான விருதை இந்நகரம் வென்றுள்ளது.
Post Views:
781