TNPSC Thervupettagam

நமாமி கங்கைத் திட்டத்திற்குக் கிடைத்த அங்கீகாரம்

December 18 , 2022 888 days 401 0
  • இந்தியாவின் புனித நதியான கங்கையைப் புனரமைப்பதற்காகத் தொடங்கப்பட்ட நமாமி கங்கை திட்டத்தினை இயற்கையைப் புதுப்பிப்பதற்காகத் தொடங்கப்பட்ட 10 சிறந்த உலக மறுசீரமைப்புப் பணிகளில் ஒன்றாக ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்துள்ளது.
  • சுற்றுச்சூழல் அமைப்பின் மறுசீரமைப்பு தொடர்பான ஐக்கிய நாடுகளின் பத்து ஆண்டுகளுக்கான முன்னெடுப்பின் கீழ் இவை தேர்ந்தெடுக்கப்பட்டன.
  • இது ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பு (UNEP) மற்றும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) ஆகியவற்றினால் ஒருங்கிணைக்கப்பட்டு மேற்கொள்ளப்படும் ஒரு உலகளாவிய இயக்கமாகும்.
  • கங்கை நதியைப் புதுப்பிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து 2014 ஆம் ஆண்டில் மத்திய அரசினால் நமாமி கங்கை திட்டம் தொடங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்