நமோ ஆளில்லா விமான தீதி திட்டத்தின் கீழ் பெண் விமானிகள்
April 6 , 2026 15 hrs 0 min 15 0
நமோ ஆளில்லா விமான தீதி திட்டத்தின் கீழ், ஆளில்லா விமானத்தின் விமானிகளாகப் பயிற்சி பெற்ற பெண்களைக் கொண்ட சுய உதவிக் குழுக்கள் (SHGs) அதிக எண்ணிக்கையில் உள்ள மாநிலமாக கர்நாடகா முதலிடம் பிடித்துள்ளது.
கர்நாடகாவில் மொத்தம் 145 சுய உதவிக் குழு பெண் உறுப்பினர்கள் ஆளில்லா விமானத்தின் விமானி பயிற்சி பெற்றுள்ள நிலையில்இது இந்தியாவிலேயே மிக அதிகமாகும்.
இத்திட்டத்தின் மூலம் 2023-24 முதல் 2025-26 ஆம் ஆண்டு வரையிலான காலக் கட்டத்தில், பெண் சுய உதவிக் குழுக்களுக்கு 15,000 விவசாய ஆளில்லா விமானங்களை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 1,094 சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு ஆளில்லா விமானத்தின் விமானி பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளைத் தெளிக்க ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்த பெண்களுக்கு உதவும் இந்தப் பயிற்சியானது, விவசாயத் திறன் மற்றும் பயிர் உற்பத்தியை மேம்படுத்துகிறது.