TNPSC Thervupettagam

நம்ம 112 செயற்கை நுண்ணறிவு அவசரகால அமைப்பு

May 7 , 2026 3 days 52 0
  • பெங்களூரு நகரக் காவல்துறை, 'நம்ம 112' (Namma 112) அவசரக்கால அமைப்பில் செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த பலமொழி மேம்பாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • 'நம்ம 112' என்பது இந்தியாவின் தேசிய அவசரகால உதவி எண்ணான 112-இன் அவசரகாலப் பதிலளிப்பு ஆதரவு அமைப்பின் (ERSS) ஒரு பகுதியாகும்.
  • 'VANKI' (நாடு தழுவிய முக்கியத் தலையீடுகளுக்கான பலமொழி குரல் செயற்கை நுண்ணறிவு) எனப்படும் புதிய அமைப்பு, அவசர அழைப்புகளின்போது நிகழ்நேர மொழி பெயர்ப்பை சாத்தியமாக்குகிறது.
  • மொழித் தடைகள் இல்லாமல் காவல்துறை, ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு சேவைகளின் மூலம் விரைவான பதிலளிப்பை வழங்க இந்த அமைப்பு உதவுகிறது.
  • அவசரகால உதவி எண் சேவைகளில் பன்மொழி செயற்கை நுண்ணறிவை அறிமுகப் படுத்திய இந்தியாவின் முதல் நகரமாக பெங்களூரு உருவெடுத்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்