TNPSC Thervupettagam

நரம்பியல் தொழில்நுட்பத்திற்கான யுனெஸ்கோ வழிகாட்டுதல்கள்

December 3 , 2025 9 days 47 0
  • யுனெஸ்கோ நரம்பியல் தொழில்நுட்பத்தின் நெறிமுறைகள் குறித்த அதன் முதல் உலகளாவியக் கட்டமைப்பை வெளியிட்டது.
  • நரம்பியல் தொழில்நுட்பம் என்பது மனித மூளை உள்ளிட்ட நரம்பியல் அமைப்புகளை அணுகி, மதிப்பிடும் மற்றும் செயல்படும் சாதனங்கள் மற்றும் நடைமுறைகளைக் குறிக்கிறது.
  • இந்தக் கட்டமைப்பு அரசியல், மருத்துவம் மற்றும் வணிகச் சூழல்களில் மனித மூளைத் தரவை தவறாகப் பயன்படுத்துவதிலிருந்துப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது நன்மை, தொடர்பு, தீங்கு விளைவிக்காமை, தன்னாட்சி, பாகுபாடு இல்லாமை, பொறுப்புக் கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மை போன்ற கொள்கைகளை வலியுறுத்துகிறது.
  • இந்தக் கட்டமைப்பு பொது மற்றும் தனியார் துறைகளில் பொறுப்பான ஆராய்ச்சி மற்றும் புதுமை (RRI) ஆகியவற்றை ஊக்குவிக்கிறது.
  • பாதுகாப்பான மற்றும் நியாயமான நரம்பியல் தொழில்நுட்ப மேம்பாட்டினை உறுதி செய்ய திறந்த அறிவியல் மாதிரிகள் மற்றும் நெறிமுறை சார் சுய-ஒழுங்குமுறையை இது பரிந்துரைக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்