நறுமண (மசாலா) பொருட்கள் குறித்த புள்ளி விவரங்கள் ஒரு பார்வை 2021
December 30 , 2021 1300 days 516 0
வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நறுமணப் பொருட்கள் குறித்த புள்ளி விவரங்கள் ஒரு பார்வை – 2021 என்று தலைப்பிடப்பட்ட புத்தகத்தினை வெளியிட்டு உள்ளார்.
இப்புத்தகமானது நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு மசாலாப் பொருட்களின் சாகுபடி பரப்பளவு, உற்பத்தி, உற்பத்தித் திறன், ஏற்றுமதி, இறக்குமதி, விலை மற்றும் இலாப மதிப்பு போன்றவை குறித்த புள்ளி விவரங்களின் தொகுப்பாக திகழ்கிறது.
இப்புத்தகத்தினை பாக்கு மற்றும் மசாலாப் பொருட்கள் மேம்பாட்டு இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.
இந்தப் புத்தகமானது கடந்த ஏழு ஆண்டுகளில் மசாலாத் துறையில் பெற்ற வளர்ச்சி மற்றும் சாதனைகளை குறிப்பிடுகிறது.
2014-15 ஆம் ஆண்டில் 67 லட்சம் டன்களாக இருந்த நாட்டின் மசாலாப் பொருட்களின் உற்பத்தியானது 7.9% வருடாந்திர வளர்ச்சி வீதத்துடன் 2020-21 ஆம் ஆண்டில் 106 லட்சம் டன்களுக்கும் மேல் உயர்ந்துள்ளது.