நலத்திட்ட நிதிகளை கண்காணிப்பதற்கு உதவ, பொது நிதி நிர்வாக அமைப்பு
October 28 , 2017 2832 days 1128 0
பல்வேறுபட்ட, அரசு நலத்திட்டங்களுக்கான நிதி அளித்தலை கண்காணிக்க பொது நிதி நிர்வாக அமைப்பினை (Public Financial Management System - PFMS) கட்டாயமாக்கப் பயன்படுத்த வேண்டும் என நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
PFMS, மூலவளங்களின் கிடைக்குமளவு, நிதிப்பாய்வு மற்றும் அசல் பயன்பாடு ஆகியவை தொடர்பான தகவல்களை உடனுக்குடன் தரும்.
இது நிதி நிர்வாகத்தை சீர்படுத்தும் திறன் மிகு திட்டமாகும். இதன் மூலம் நிதிஅமைப்புகளின் மிதவைத்தன்மை பெருமளவு குறைந்து, நேரத்திற்கேற்ப விடுவிப்பு வசதியை ஏற்படுத்தும். மேலும் அரசின் கடன்கள் மீதான வட்டிச் செலவால் அரசிற்கு ஏற்படும் நேரடி தாக்கத்தையும் குறைக்கும்.
PFMS ஆனது அரசினை, பிணைக்கப்பட்ட நிதி நிர்வாக அமைப்பு (The Government Integrated Financial Management Information System - GIFMIS) நோக்கி செலுத்தும். இது ஓர் ஒட்டு மொத்த வரவு செலவு மற்றும் கணக்கியல் திட்டமாகும்.