தமிழ்நாடு அரசு 'நலம் TN' என்ற ஒருங்கிணைந்த டிஜிட்டல் பொது சுகாதார சேவை இணையதளத்தை சென்னையில் அறிமுகப்படுத்தியது.
இந்த இணையதளம் நோயாளிகள், மருத்துவமனைகள் மற்றும் பொது சுகாதார நிறுவனங்களுக்கான அரசு சுகாதார சேவைகளை ஒருங்கிணைக்கும் ஒரு ஒற்றை டிஜிட்டல் தளமாகும்.
இது சுகாதாரச் சேவைகளுக்கான இணையவழி அணுகல், மருத்துவமனை ஒருங்கிணைப்பு மற்றும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் அரசு மருத்துவ மனைகளுக்கு நேரடிப் பங்களிப்புகளைச் செய்வதற்கான கண்காணிக்கப்பட்ட அமைப்பு ஆகியவற்றைச் செயல்படுத்துகிறது.
இந்த இணையதளம் மாநிலத்தின் டிஜிட்டல் சுகாதார அமைப்பை வலுப்படுத்துவதோடு, வெளிநோயாளர் (OP) முன்பதிவு செய்யப் பயன்படும் வாட்ஸ்அப்/புலனம் அடிப்படையிலான சாட்போட் ஆன NalamAI அமைப்பை நிறைவு செய்கிறது.
அணுகக்கூடிய, வெளிப்படையான மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான தமிழ்நாட்டின் முயற்சியின் ஒரு பகுதியாக மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையால் இது தொடங்கப்பட்டது.