பிரதமர் நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தின் முதல் கட்ட செயல்பாடுகளைத் தொடங்கி வைத்தார்.
இந்த விமான நிலையமானது மகாராஷ்டிராவின் விவசாயிகளை ஐரோப்பா மற்றும் மத்தியக் கிழக்கில் உள்ள உலகளாவிய சந்தைகளுடன் இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த விமான நிலையமானது ஒரு தானியங்கி மக்கள் இயக்க இணைப்பு முனையங்களைக் கொண்டுள்ளது மற்றும் நீர்வழி வாடகை வாகனச் சேவை மூலம் இணைக்கப்பட்ட இந்தியாவில் முதல் இடமாகவும் இருக்கும்.
உலகின் மூன்றாவது பெரிய உள்நாட்டு விமானச் சந்தையான இந்தியா 2030 ஆம் ஆண்டிற்குள் ஒரு பெரிய பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் சீராக்க மையமாக மாறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.