TNPSC Thervupettagam

நவீன குடிமைப் பாதுகாப்பு தொண்டர் படை

August 17 , 2026 16 hrs 0 min 38 0
  • 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று புது தில்லி செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின உரையின் போது, “மிகப்பெரிய, நவீன” குடிமைப் பாதுகாப்பு தொண்டர் படையை பிரதமர் அறிவித்தார்.
  • முன்மொழியப்பட்ட இந்தப் படையானது நவீனப் பாதுகாப்பு சவால்கள் மற்றும் அவசர காலச் சூழ்நிலைகளின் போது பொதுமக்கள் பாதுகாப்பை வலுப்படுத்தும்.
  • இந்தியாவின் குடிமை (சிவில்) பாதுகாப்பு அமைப்பானது 1968 ஆம் ஆண்டின் சிவில் பாதுகாப்புச் சட்டம் மற்றும் விதிகளால் நிர்வகிக்கப்படுகிறது.
  • குடிமைப் பாதுகாப்பு தொண்டர்கள் அவசர காலங்களில் எச்சரிக்கை அமைப்புகள், வெளியேற்றம், மீட்பு, முதலுதவி, தீயணைப்பு மற்றும் முக்கியமான உள்கட்டமைப்புகளின் பாதுகாப்பு ஆகியவற்றிற்கு ஆதரவளிக்கின்றனர்.
  • புதிய தொண்டர் படையானது நவீன பயிற்சி மற்றும் மேம்பட்ட அவசரகால-பதிலளிப்பு நெறிமுறைகளைப் பெறும்.
  • ஊர்க்காவல் படையினர் (Home Guards) என்பது மாநிலக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஒரு தொடர்புடைய துணைப் படையாகும், மேலும் இவர்கள் காவல்துறை, சிவில் நிர்வாகம் மற்றும் பேரிடர்-பதிலளிப்புக் குழுக்களுக்கு உதவுகின்றனர்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்