நாகாலாந்து மாநிலத்தின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர்கள்
March 5 , 2023 1063 days 583 0
நாகாலாந்து மாநிலத்தினைச் சேர்ந்த இரண்டு பெண்கள், அந்த மாநிலச் சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற முதல் இரண்டு பெண்கள் என்ற வரலாற்றினைப் படைத்து உள்ளனர்.
ஹெகானி ஜகாலு மற்றும் சல்ஹௌடூநெள குரூஸ் ஆகிய இருவரும் நாகாலாந்து மாநில முதலமைச்சர் நெய்ஃபியூ ரியோ அவர்களின் தேசியவாத ஜனநாயக முன்னேற்றக் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
நாகாலாந்து மாநிலம் உருவானதில் இருந்து இதுவரை நடைபெற்ற 14 சட்டமன்றத் தேர்தல்களில், எந்தப் பெண்ணும் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட வில்லை.
இந்த ஆண்டில் நடைபெற்ற நாகாலாந்து சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் நான்கு பெண்கள் அடங்குவர்.