நாகேஸ்வர் ராவ் - மத்தியப் புலனாய்வு அமைப்பின் இடைக்கால இயக்குநர்
October 26 , 2018 2612 days 837 0
மத்தியப் புலனாய்வு அமைப்பின் இயக்குநரான அலோக் குமார் வர்மா மற்றும் மத்தியப் புலனாய்வு அமைப்பின் சிறப்பு இயக்குநரான ராகேஷ் அஸ்தானா ஆகியோர் தங்களது பணிகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மத்தியப் புலனாய்வு அமைபபின் மூத்த அதிகாரிகள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நியமனங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவானது மத்தியப் புலனாய்வு அமைப்பின் இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர் ராவின் நியமனத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இது உடனடியாக அமலுக்கு வரும் என்றும் (அக்டோபர் 24) அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகேஸ்வர் ராவ் தற்பொழுது மத்தியப் புலனாய்வு அமைப்பின் இணை இயக்குநராக உள்ளார்.