இந்தியா-இந்தோனேசியா நாடாளுமன்ற நட்புறவு குழுவின் தலைவராக பரிந்துரைக்கப்பட்ட இளம் வயது நாடாளுமன்ற உறுப்பினராக ஸ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே மாறியுள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சி (NCP) எம் நாடாளுமன்ற உறுப்பினர் பி. சுப்ரியா சுலே இந்தியா-சிங்கப்பூர் நாடாளுமன்ற நட்புறவு குழுவிற்கு தலைமை தாங்குகிறார்.
18வது மக்களவையில் மொத்தம் 64 நாடாளுமன்ற நட்புறவு குழுக்கள் உருவாக்கப் பட்டுள்ளன.
மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் மகனான ஸ்ரீகாந்த் ஷிண்டே மூன்றாவது முறை நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.
அவர் முன்னதாக மே 2025 இல் ஐக்கிய அரபு அமீரகம் (UAE), சியரா லியோன், லைபீரியா மற்றும் காங்கோ ஜனநாயக குடியரசு (DRC) ஆகிய நாடுகளுக்கு சர்வதேச நாடாளுமன்றக் குழுக்களை வழி நடத்தியுள்ளார்.
இந்தியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையிலான கலாச்சார, பொருளாதார மற்றும் சமூக உறவுகளை வலுப்படுத்த இந்தக் குழு பணியாற்றும்.