TNPSC Thervupettagam

நாடு தழுவிய பொதுமக்கள் பாதுகாப்பு ஒத்திகை

May 8 , 2025 17 hrs 0 min 26 0
  • மத்திய அரசானது, மே 07 ஆம் தேதியன்று 259 இடங்களில் நாடு தழுவிய பொதுமக்கள் பாதுகாப்பு ஒத்திகையை நடத்தியது.
  • இந்த ஒத்திகைகளில் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை ஒலிகளை எழுப்புவதும், 'எதிரி நாட்டுத் தாக்குதலின்' போதான பாதுகாப்பிற்காக என்று மக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளில் பொதுமக்களுக்குப் பயிற்சி அளிப்பதும் அடங்கும்.
  • இந்த ஒத்திகையானது 1968 ஆம் ஆண்டு பொதுமக்கள் பாதுகாப்பு விதிகளின் கீழ் நடத்தப் பட்டது.
  • மாநில மற்றும் உள்ளாட்சி மட்டங்களில் தற்போதைய மக்கள் பாதுகாப்பு குறித்த வழி முறைகளின் தயார்நிலை மற்றும் செயல்திறனைப் பரிசோதிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
  • 1971 ஆம் ஆண்டு வங்காளதேசப் போருக்குப் பிறகு முதல் முறையாக இவ்வளவு பெரிய அளவிலான மாதிரி ஒத்திகை நடத்தப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்