நாட்டின் பகுதிகளை வரைபடமாக்குவதற்கு ஆளில்லா விமானங்கள்
September 17 , 2019 2120 days 673 0
இந்தியக் கள ஆய்வு நிறுவனமானது (Survey of India - SoI) நாட்டின் பகுதிகளை வரைபடமாக்குவதற்கு முதன்முறையாக ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்த இருக்கின்றது.
இந்தியப் புவியியலில் 75 சதவிகிதப் பகுதிகளை (2.4 மில்லியன் சதுர கி.மீ) வரைபடமாக்குவதற்கு ஏறத்தாழ 300 ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்பட இருக்கின்றன.
இதற்காக முன்னோடியில்லாத விவரங்கள் சேகரிக்கப்பட இருக்கின்றன.
கிராமங்களில் உள்ள நிலத்தின் உயர் தெளிவுத் திறன் கொண்ட வரைபடங்கள் கிராமங்களில் நிலப் பட்டாக்களை (நிலம் சார்ந்த விவரங்களை) டிஜிட்டல் மயமாக்க உதவும்.
தற்போது சிறந்த SoI வரைபடங்கள் 1 : 250000 என்ற அளவில் தெளிவுத் திறன் கொண்டவையாகும். அதாவது வரைபடத்தில் 1 செ.மீ ஆனது நிலப்பரப்பில் 2500 செ.மீ. என்ற அளவைக் குறிக்கும்.
இப்போது தயாரிக்கப்பட இருக்கும் வரைபடங்கள் 1: 500 என்ற அளவில் தெளிவுத்திறன் கொண்டதாக இருக்கும். அதாவது வரைபடத்தில் 1 செ.மீ ஆனது நிலப் பரப்பில் 500 செ.மீ. என்ற அளவைக் குறிக்கும்.
இதுபற்றி
இந்தியக் கள ஆய்வு நிறுவனமானது நாட்டின் தேசியக் கணக்கெடுப்பு மற்றும் வரைபடம் ஆகியவற்றை மேற்கொள்ளும் ஒரு அமைப்பாகும்.
இது இந்திய அரசின் மிகப் பழமையான ஒரு அறிவியல் துறை ஆகும்.
இது 1767 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இதன் தலைமையகம் உத்தரகாண்ட் மாநிலத்தின் டேராடூனில் உள்ளது.
இது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் உள்ளது.