நாட்டின் முதல் ஒருங்கிணைந்த வான்வழி மருத்துவ ஊர்திச் சேவை
September 14 , 2020 1884 days 806 0
நாட்டின் முதல் ஒருங்கிணைந்த வான்வழி மருத்துவ ஊர்திச் சேவையைக் கர்நாடக முதலமைச்சரான எடியூரப்பா அவர்கள் திறந்து வைத்தார்.
வான்வழி மருத்துவ ஊர்தி நிறுவனமான இன்டர்நேஷனல் கிரிட்டிகல் ஏர் டிரான்ஸ்ஃபர் டீம் (International Critical Air Transfer Team) இதைக் கியாதியின் (Kyathi) ஒத்துழைப்புடன் இயக்கும்.
இந்த மருத்துவ ஊர்தியில் தீவிர கோவிட் -19 நோயாளிகளைப் பாதுகாப்பாகக் கொண்டு செல்ல அதிநவீன ஜெர்மன் தனிமைப்படுத்தும் பாட் கருவி (German Isolation Pod) பொருத்தப் பட்டுள்ளது.
இது நீண்ட தூர அவசர மருத்துவப் போக்குவரத்தை மேற்கொள்ளக் கூடியது, இது ஹெலிகாப்டர் மற்றும் சாலை மருத்துவ ஊர்திச் சேவைகளுடன் இணைந்து பாதிக்கப்பட்டோருக்கும் மருத்துவர்களுக்குமான இணைப்பையும் வழங்குகிறது.