TNPSC Thervupettagam

நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் குறித்த சர்வதேச மாநாடு

March 6 , 2020 1910 days 1172 0
  • ICONSAT (நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான சர்வதேச மாநாடு - International Conference on Nano Science and Technology) என்பது இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் நானோ திட்டத்தின் தலைமையில் இந்தியாவில் நடைபெறும் ஒரு சர்வதேச மாநாட்டுப் பதிப்பாகும். இந்த மாநாடு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகின்றது.
  • ICONSAT -2020ஐ கொல்கத்தாவில் உள்ள எஸ்.என். போஸ் தேசிய அடிப்படை அறிவியல் மையத்தால் நடத்தப்படுவதற்கு இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் நானோ திட்டமானது ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்த மாநாடானது மார்ச் 5 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை கொல்கத்தாவில் நடைபெறுகின்றது.
  • நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் வளர்ந்து வரும் பகுதிகளில் சமீபத்திய வளர்ச்சியுடன் வேகத்தை வைத்திருப்பது இந்த மாநாட்டின் நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்