இந்திய விவசாயிகள் உரக் கூட்டுறவு நிறுவனமானது (IFFCO - Indian Farmers Fertiliser Cooperative) நைட்ரஜன் உரத்தை அடிப்படையாகக் கொண்ட நானோ யூரியாவினை 2021 ஆம் ஆண்டு ஜுன் மாதத்தில் சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது.
500 மி.லி. அளவிலான நானோ யூரியாவானது 45 கிலோ அளவிலான சாதாரண யூரியாவிற்கு இணையாகும்.
500 மி.லி. நானோ யூரியாவின் விலை ரூ.240 ஆகும்.
இது தவிர, இது விவசாயிகளின் உள்ளீட்டுச் செலவை 15% வரை குறைத்து 20% வரை மகசூலை அதிகரிக்கச் செய்யும்.