TNPSC Thervupettagam

நான்காவது S-400 வான் பாதுகாப்பு அமைப்பு

May 25 , 2026 14 hrs 0 min 29 0
  • 2026 ஆம் ஆண்டு மே மாதத்தில் ரஷ்யாவிடமிருந்து நான்காவது S-400 Triumf வான்வெளி பாதுகாப்பு எறிகணை அமைப்பை இந்தியா பெறவுள்ளது.
  • ஐந்து S-400 வான் பாதுகாப்பு அமைப்புகளைப் பெறுவதற்காக, 2018 ஆம் ஆண்டில் ரஷ்யாவுடன் 5.43 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது.
  • S-400 Triumf என்பது விமானங்கள், சீர்வேக எறிகணைகள் மற்றும் உந்துவிசை எறிகணைகளை அழிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு நீண்ட தூர, தரையிலிருந்து வான் இலக்குகளைத் தாக்கும் எறிகணை அமைப்பாகும்.
  • இந்த நான்காவது S-400 வான் பாதுகாப்பு அமைப்பு, மேற்கு எல்லையில் வான் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ராஜஸ்தானில் நிலைநிறுத்தப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.
  • அசல் ஒப்பந்தத்தின் கீழ் ஐந்தாவது மற்றும் இறுதி வான் பாதுகாப்பு அமைப்பு 2026 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்குள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்