TNPSC Thervupettagam

நான்கு நாடுகளில் தளவாடத் தளங்கள் – HAL

March 10 , 2020 1984 days 668 0
  • இந்தியாவின் இலகுரக போர் விமானமான தேஜாஸ் மற்றும் இராணுவ ஹெலிகாப்டர்களை வாங்குவதற்காக நாடுகளைக் கவர்ந்திழுக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக நான்கு நாடுகளில் தளவாடத் தளங்களை அமைப்பதற்கு மத்திய அரசிற்குச் சொந்தமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் (Hindustan Aeronautics Ltd - HAL) முயற்சித்து வருகின்றது.
  • மலேசியா, வியட்நாம், இந்தோனேசியா மற்றும் இலங்கை ஆகியவை இந்த நான்கு நாடுகளாகும்.
  • தேஜாஸ் விமானமானது வானூர்தி மேம்பாட்டு நிறுவனம் மற்றும் HAL ஆகியவற்றால் மேம்படுத்தப் படுகின்றது.
  • ஜெட் விமானத்தின் ஆயுட்காலமானது மற்ற முன்னணி போர் விமானங்களைப் போலவே குறைந்தபட்சம் 30 ஆண்டுகளாக இருக்கும்.
  • மேலும் தேஜாஸ், தாக்குதல் ரக வானூர்தியான ருத்ரா மற்றும் மேம்பட்ட இலகுரக வானூர்தியான துருவ் போன்ற முக்கிய வானூர்திகளை விற்க இருக்கும் அரசாங்கத்தின் முன்னுரிமையுடன் ஒத்துப் போகும் வகையில் ஏற்றுமதியை அதிகரிப்பதில் HAL இப்போது தீவிரமாக கவனம் செலுத்துகின்றது என்றும் HAL தலைவரும் நிர்வாக இயக்குநருமான ஆர் மாதவன் கூறியுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்