HSBC (ஹாங்காங் மற்றும் ஷாங்காய் வங்கி நிறுவனம்) உலகின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றாகும் மற்றும் நிகர பூஜ்ஜிய வங்கிக் கூட்டணியின் (NZBA) நிறுவன உறுப்பினராகும்.
2050 ஆம் ஆண்டுக்குள் நிகரப் பூஜ்ஜிய பசுமை இல்ல வாயு உமிழ்வுடன் அத்துறையின் செயல்பாடுகளைச் சீரமைக்க உறுதி பூண்டுள்ள கூட்டணியிலிருந்து விலகிய முதல் இங்கிலாந்து கடன் வழங்குநராக இது மாறியுள்ளது.
இருப்பினும், 2050 ஆம் ஆண்டுக்குள் நிகரப் பூஜ்ஜிய இலக்கை அடைய HSBC தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியது.
இந்த முடிவானது முக்கிய அமெரிக்க மற்றும் கனடா நாட்டு வங்கிகளின் சமீபத்திய வெளியேற்றத்தினைத் தொடர்ந்து எடுக்கப்படுள்ளது.
NZBA 2021 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்ட நிதி முன்னெடுப்பின் கீழ் தொடங்கப்பட்டது.