TNPSC Thervupettagam

நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து - NCERT

April 5 , 2026 15 hrs 0 min 50 0
  • தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் சபையானது (NCERT), மத்திய கல்வி அமைச்சகத்தால் ஒரு தனித்துவமான பிரிவின் கீழ் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
  • பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) நிபுணர் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் இந்த அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
  • இதன் மூலம் NCERT இப்போது ஆராய்ச்சித் திட்டங்கள், முனைவர் பட்டப் (PhD) படிப்புகள் மற்றும் புதுமையான கல்வித் திட்டங்களைத் தொடங்க முடியும்.
  • NCERT என்பது இந்தியாவில் பள்ளிக் கல்வியை மேம்படுத்துவதற்காக 1961 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஒரு தன்னாட்சி அமைப்பாகும்.
  • இது மத்திய மற்றும் மாநில அரசுகளுக்காகப் பாடப்புத்தகங்கள், ஆராய்ச்சி மற்றும் கொள்கைகளை உருவாக்குகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்