சென்னையைச் சேர்ந்த தேசியப் பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனம் (NIOT), ஒரு உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட நிகழ்நேர பெருங்கடல் கண்காணிப்பு அமைப்பை உருவாக்கியுள்ளது.
மீன்பிடிப் படகுகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த அமைப்பானது நீரின் வெப்ப நிலை, உப்புத்தன்மை மற்றும் ஆழம் போன்ற கடல் சார் தரவுகளைச் சேகரிக்க உதவும்.
ஆழமற்ற கடல் பகுதிகள் மற்றும் கழிமுகப் பகுதிகளில் பெருங்கடல் தளத்தில் எந்தவித இடையூறும் செய்யாமல் இந்த அமைப்பைப் பயன்படுத்தலாம்.