நிகழ்நேர வெள்ள முன்னறிவிப்பு மற்றும் இடஞ்சார்ந்த முடிவெடுத்தல் ஆதரவு அமைப்பு (RTFF & SDSS) பெற்ற முதல் இந்திய நகரமாக சென்னை மாறியுள்ளது.
107.2 கோடி ரூபாய் மதிப்பிலான இந்தத் திட்டமானது பாதிக்கப்படக் கூடிய பகுதிகளுக்கு நதி மற்றும் தெருக்கள் அளவிலான வெள்ள முன்னறிவிப்புகளை வழங்குகிறது.
இந்த அமைப்பு ஆனது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்கள் உட்பட சுமார் 4,974 சதுர கி.மீ பரப்பளவில் நிறுவப் பட்டுள்ளது.
இது அடையாறு, கூவம், கொசஸ்தலையாறு மற்றும் கோவளம் நதிகளின் துணைப் படுகைகளைக் கண்காணிக்கிறது.
RTFF & SDSS ஆனது மாநிலத்தின் பேரிடர் மேலாண்மை தளமான TNSMART உடன் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
முன்னறிவிப்புகள் ஆனது முக்கிய அரசு நிறுவனங்களுடன் பகிரப் பட்டு TN-Alert கைபேசி செயலி மூலம் புதிய தகவல்களைத் தேர்ந்தெடுக்கும்.