TNPSC Thervupettagam

நிகோபரி ஹோடி கைவினைப் பொருள்

November 25 , 2022 954 days 452 0
  • அந்தமான் & நிக்கோபார் தீவு அரசானது, நிகோபரி ஹோடி கைவினைப் பொருளுக்கு புவிசார் குறியீடு வழங்கக் கோரி தனது முதல் விண்ணப்பத்தைத் தாக்கல் செய்தது.
  • ஹோடி என்பது நிக்கோபாரி பழங்குடியினரின் பாரம்பரிய கைவினைப் பொருள் ஆகும்.
  • இது பொதுவாக நிக்கோபார் தீவுப் பகுதிகளில் இயக்கப் படுகின்ற ஒரு பக்கவாட்டு மிதவைகள் கொண்ட படகு ஆகும்.
  • ஒரு ஹோடியை உருவாக்கச் செய்வதற்கான தொழில்நுட்பத் திறன்கள் நிகோபாரீஸ் இனத்தின் முன்னோர்களிடமிருந்து பெறப்பட்ட உள்ளூர் அறிவை அடிப்படையாகக் கொண்டதாகும்.
  • ஹோடி படகானது, அப்பகுதியில் அல்லது அருகாமையில் உள்ள தீவுகளில் இருந்து கிடைக்கும் மரங்கள் கொண்டு கட்டமைக்கப்பட்டதோடு அந்தப் படகின் வடிவமைப்பு என்பது ஒவ்வொரு தீவுப் பகுதிக்கும் சற்று மாறுபடும்.
  • ஒரு தீவில் இருந்து மற்றொரு தீவிற்கு மக்களையும் பொருட்களையும் ஏற்றிச் செல்வதற்கும், தேங்காய்களை ஏற்றிச் செல்வதற்கும், மீன்பிடித்தல் மற்றும் பந்தய நோக்கங்களுக்காகவும் ஹோடி படகுகள் பயன்படுத்தப்படுகின்றன.
  • பனாரஸ் பகுதியினைச் சேர்ந்த தண்டாய் எனும் (பால், உலர் பழங்கள் மற்றும் மசாலாப் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும் பானம்) புவிசார் குறியீடு கோரி பதிவான விண்ணப்பமானது, சென்னை புவிசார் குறியீட்டு அலுவலகத்தில் பதிவு செய்யப் பட்ட 1,000வது விண்ணப்பமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்