நிதிசார் கல்வியறிவு மற்றும் நிதி உள்ளடக்கம் பற்றிய கணக்கெடுப்பு
January 1 , 2023 959 days 719 0
இந்தியா முழுவதிலுமான “நிதி கல்வியறிவு மற்றும் நிதி உள்ளடக்கம்” பற்றிய ஒரு கணக்கெடுப்பானது இந்திய ரிசர்வ் வங்கியினால் நடத்தப்பட்டது.
நாடு முழுவதும் வாழும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களிடையே எண்ணிம வங்கி குறித்த விழிப்புணர்வும் கல்வி அறிவும் ஒன்றுக்கொன்று இணையான அளவில் உள்ளன.
முதலீடு, வரவு செலவுத் திட்டம் மற்றும் தனிப்பட்ட நபரின் நிதி மேலாண்மை போன்ற பல்வேறு நிதிசார் திறன்களைப் பயன்படுத்துவதனைப் பற்றிய ஒரு புரிதலையும், நிபுணத்துவத்தினையும் பெற்றிருப்பது நிதியியல் கல்வியறிவு எனப்படும்.