UNCTAD அமைப்பின் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு முன்னறிவிப்புகள் 2025 அறிக்கை ஆனது, 2024 ஆம் ஆண்டில் 2.8% ஆக இருந்த உலகளாவிய வளர்ச்சியானது 2025 ஆம் ஆண்டில் 2.3% ஆகக் குறையும் என்று கூறுகிறது.
2025 ஆம் ஆண்டில் நிலையற்றத் தன்மைக் குறியீடு (VIX) மிக அதிகமாக உள்ளதுடன் நிதிச் சந்தைகள் நிலையற்றவையாக உள்ளன.
2024 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் விகிதக் குறைப்புகளுக்குப் பிறகும் நீண்ட காலக் கடன் செலவுகள் அதிகரித்து வருகின்றன.
மிகக் குறைவான வருமானம் கொண்ட நாடுகளில் பாதிக்கும் மேற்பட்டவை 2025 ஆம் ஆண்டில் கடன் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றன.
தெற்கு நாடுகளின் வர்த்தகம் மற்றும் ஆசிய நாடுகளுக்குள்ளான வர்த்தகம் இன்னும் வலுவாக உள்ளன.
2024 ஆம் ஆண்டில் உலகளாவிய வளர்ச்சியில் கிழக்கு மற்றும் தெற்காசிய நாடுகள் 40 சதவீதத்திற்கும் அதிகமான பங்கினைக் கொண்டிருந்தன.
2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் இந்தியா ஒரு முன்னணி வளர்ச்சி இயக்கியாக உள்ளது.
கட்டணங்கள் மற்றும் குறைவான ஏற்றுமதிகள் காரணமாக 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் உலகளாவிய பொருட்களின் வர்த்தகம் குறைந்துள்ளது.
ஆனால் இந்தியா, இந்தோனேசியா மற்றும் இலத்தீன் அமெரிக்காவில் எண்ணிமச் சேவைகளில் வர்த்தகம் தொடர்ந்து வளர்ந்து வருகிறது.
செல்வ வளம் மிக்க நாடுகள் பாதுகாப்பு துறைக்காக அதிகமாக செலவிடுகின்றன.
இதற்கிடையில், ஏழ்மை நிலையில் உள்ள நாடுகளுக்கான உதவியானது 2023 முதல் 2025 ஆம் ஆண்டு வரை 18% குறையும் என்பதோடு இது சுகாதாரம் மற்றும் கல்வியில் முன்னேற்ற நிலையை ஆபத்தில் ஆழ்த்தும்.