நிதியியல் நடவடிக்கைப் பணிக் குழு – சாம்பல் நிறப் பட்டியல்
June 29 , 2021 1601 days 676 0
நிதியியல் நடவடிக்கைப் பணிக் குழுவானது (Financial Action Task Force – FATF) ஹைத்தி, மால்டா, பிலிப்பைன்ஸ் மற்றும் தெற்கு சூடான் ஆகியவற்றைச் சாம்பல் நிறப் பட்டியலில் சேர்த்துள்ளது.
இந்த பட்டியலிலிருந்து கானா நாடு விலக்கப் பட்டுள்ளது.
FATF
இந்த அமைப்பானது G7 நாடுகளின் முன்னெடுப்பினால் உருவாக்கப்பட்ட ஒரு அரசுகளுக்கிடையேயான அமைப்பாகும்.
இது 1989 ஆம் ஆண்டில் நிறுவப் பட்டது.
இது பாரீசை மையமாக கொண்டுள்ள ஒரு அமைப்பாகும்.
இது பணமோசடித் தடுப்புச் சட்டத்திற்கு வேண்டிய தரநிலைகளை நிர்ணயிக்கிறது.
சாம்பல் நிறப் பட்டியலில் தற்போது 22 நாடுகள்/பிராந்தியங்கள் இடம் பெற்றுள்ளன.