நிதியியல் நடவடிக்கை பணிக்குழுவின் சாம்பல்நிறப் பட்டியல்
November 1 , 2022 1026 days 483 0
நிதியியல் நடவடிக்கை பணிக்குழுவானது (FATF), பாகிஸ்தான் நாட்டினை "அதிக கண்காணிப்பு தேவையுள்ள" (சாம்பல் நிற பட்டியல்) நாடுகளின் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது.
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் பட்டியலில் இருந்து பாகிஸ்தான் நீக்கப் பட்டு உள்ளது.
இது முதலில் 2008 ஆம் ஆண்டில் பட்டியலில் சேர்க்கப்பட்டு, 2009 ஆம் ஆண்டில் நீக்கப் பட்டது என்றாலும், பின்பு 2018 ஆம் ஆண்டில் மீண்டும் சேர்க்கப்பட்டது.
நிதியியல் நடவடிக்கை பணிக்குழு என்பது பயங்கரவாதத்திற்கு நிதியுதவி வழங்கல் மற்றும் பணமோசடி மீதான சர்வதேச கண்காணிப்பு அமைப்பாகும்.
பேரழிவுகளை ஏற்படுத்தும் ஆயுதங்களின் உருவாக்கத்திற்கு நிதியுதவி செய்வதை எதிர்கொள்வதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது 1989 ஆம் ஆண்டில் பாரீஸ் நகரில் நடைபெற்ற வளர்ச்சி பெற்ற நாடுகளின் G-7 கூட்டத்தில் அமைக்கப்பட்டது.
இந்தியா 2006 ஆம் ஆண்டில் ‘பார்வையாளர்’ அந்தஸ்து பெற்று இந்த அமைப்பில் இணைந்த பின்னர் 2010 ஆம் ஆண்டில் அதன் முழு உறுப்பினரானது.