TNPSC Thervupettagam

நிதி ஆயோக் அறிக்கை 2025

January 11 , 2026 12 days 105 0
  • நிதி ஆயோக் அமைப்பானது வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்துடன் இணைந்து "A Comprehensive Framework to Promote Affordable Housing" என்ற அறிக்கையைத் தயாரித்துள்ளது.
  • அங்கீகரிக்கப்பட்ட மலிவு விலையிலான வீட்டுவசதித் திட்டங்களை உருவாக்கச் செய்பவர்களுக்கு 100% வரி விலக்கு மீண்டும் அறிமுகப்படுத்த பரிந்துரைத்தது.
  • குறைந்த வருமான வீட்டுவசதிக்கான கடன் இடர் உத்தரவாத நிதித் திட்டத்தின் (CRGFTLIH) கீழ் கடன் வரம்பு இரட்டிப்பாக 40 லட்சம் ரூபாயாக முன்மொழியப் பட்டு உள்ளது.
  • நிதிச் செலவுகளைக் குறைக்க, மனை விற்பனை முதலீட்டு அறக்கட்டளைகளிலிருந்து (REITs) வரும் மூலதன ஆதாயங்கள் மற்றும் வாடகை வருமானத்தில் வரி விலக்கு அளிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
  • பொருளாதார ரீதியாக நலிவடைந்தப் பிரிவினர் (EWS) மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குழுவைச் சேர்ந்த (LIG) வாங்குபவர்களுக்கு சலுகை நிதிக்காக தேசிய வீட்டு வசதி வங்கி (NHB) வரி இல்லாத பத்திரங்களை வெளியிடலாம்.
  • பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா - நகர்ப்புற 2.0 திட்டத்தின் கீழ் உள்ளவை உட்பட, மலிவு விலையிலான வீட்டு வசதித் திட்டங்களுக்கு முத்திரை வரி, பதிவுக் கட்டணம் மற்றும் நிலப் பயன்பாட்டு கட்டணங்களை மாற்றுதல் ஆகியவை விலக்கு அளிக்கப் படலாம்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்