நிதி ஆயோக் அமைப்பானது, “India’s Services Sector: Insights from GVA Trends and State-Level Dynamics” மற்றும் “India’s Services Sector: Insights from Employment Trends and State-Level Dynamics” என்ற தலைப்பிலான இரட்டை அறிக்கைகளை வெளியிட்டுள்ளது.
சேவைகள் சார்ந்த வளர்ச்சியைப் புரிந்து கொள்வதற்கு தேசிய மற்றும் மாநில அளவில் மொத்த மதிப்புக் கூட்டல் (GVA) மற்றும் வேலைவாய்ப்பு போக்குகளை இந்த அறிக்கைகள் ஆய்வு செய்கின்றன.
2024–25 ஆம் ஆண்டில் இந்தியாவின் தேசிய GVA மதிப்பில் சுமார் 55 சதவீதப் பங்களித்த சேவைத் துறையானது வளர்ந்து வரும் பிராந்திய ஒருங்கிணைப்பைக் காட்டுகிறது.
நவீன உயர் உற்பத்தித்திறன் பிரிவுகளில் வேலைவாய்ப்புகள் வரையறுக்கப்பட்ட அளவிலேயே உள்ளதால், சேவை துறைகளில் வேலைவாய்ப்பு சீரற்றதாகவே உள்ளது, மேலும் வழக்கமான துறைகள் பெரும்பாலும் முறைசாரா மற்றும் குறைந்த ஊதியம் வழங்குபவையாக உள்ளன.
குறிப்பிட்ட மாநிலம் சார்ந்த உத்திகள் மற்றும் பிராந்திய சேவை மையங்களுடன் டிஜிட்டல் உள்கட்டமைப்பு, தளவாடங்கள், நிதி, புதுமை, திறன் மேம்பாடு மற்றும் முறைப்படுத்தலை மேம்படுத்த இந்த அறிக்கைகள் பரிந்துரைக்கின்றன.