TNPSC Thervupettagam

நிதி ஒதுக்கீட்டு மசோதா 2026

March 21 , 2026 2 days 48 0
  • மத்திய அரசு நிதியாண்டிற்கான நிதியைப் பெறவும் செலவு செய்யவும் அனுமதிக்கும் நிதி ஒதுக்கீட்டு மசோதா 2026-ஐ நாடாளுமன்றம் நிறைவேற்றியது.
  • அமைச்சகங்கள், துறைகள் மற்றும் அரசுத் திட்டங்களின் செலவுகளைச் சமாளிக்க இந்தியத் தொகுப்பு நிதியிலிருந்து பணத்தைத் திரும்பப் பெற இது அதிகாரம் அளிக்கிறது.
  • இது அரசியலமைப்பின் 114-வது சரத்தின் கீழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்ற ஒரு நிலையில் அனைத்து அரசுச் செலவினங்களுக்கும் சட்டப்பூர்வமாக இது அவசியம் ஆனது.
  • வருடாந்திர வரவு செலவுத் திட்ட செயல்முறையின் ஒரு பகுதியாக மக்களவையில் மானியக் கோரிக்கைகள் மீதான வாக்கெடுப்புக்குத் பிறகு இது அறிமுகப்படுத்தப் படுகிறது.
  • இது 110-வது சரத்தின் கீழ் பண மசோதாவாக வகைப்படுத்தப்பட்டுள்ளது எனவே மாநிலங்களவையால் இதைத் திருத்தவோ அல்லது நிராகரிக்கவோ முடியாது.
  • இது நிதிப் பொறுப்புணர்வினை உறுதி செய்யும் வகையில், வாக்கெடுப்பிற்கு உட்பட்ட செலவினங்கள் மற்றும் நீதிபதிகள் மற்றும் அரசியலமைப்பு அதிகாரிகளின் ஊதியம் போன்ற கட்டாயச் செலவினங்கள் ஆகிய இரண்டையும் உள்ளடக்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்