TNPSC Thervupettagam

நிபா வைரஸ் நோய் எதிர்பொருள் – இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

June 25 , 2021 1454 days 548 0
  • இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மற்றும் தேசிய நச்சுயிரியியல் நிறுவனம் ஆகியவை நடத்திய ஆய்வில் சில வௌவால் இனங்களிலிருந்து நிபா வைரசுக்கு எதிரான நோய் எதிர்ப் பொருள் இருக்கக் கூடிய மாதிரிகள் சேகரிக்கப் பட்டுள்ளன.
  • இந்த மாதிரிகள் மகாராஷ்டிராவின் மகாபலீஸ்வரிலுள்ள ஒரு குகையிலிருந்து பெறப் பட்டுள்ளது.
  • இந்த ஆய்வானது இந்திய வௌவால்களில் நிபா வைரஸ் காணப்படுவது பற்றி ஆய்வு செய்வதை நோக்கமாகக் கொண்டதாகும்.
  • இது உலக சுகாதார அமைப்பினால் கண்டறியப்பட்ட உலகளாவிய 10 முன்னணி முன்னுரிமை நோய்க் கிருமிகள் பட்டியலினைச் சேர்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது.

குறிப்பு

  • இந்தியாவில் இதுவரை நான்கு நிபா வைரஸ் பெருந்தொற்றுகள் ஏற்பட்டுள்ளன.
  • சமீபத்திய நிபா தொற்றானது 2018 ஆம் ஆண்டில் கேரளாவில் ஏற்பட்டது.
  • நிபா வைரசிற்கு எந்தவொரு மருந்தோ () தடுப்பு மருந்தோ இல்லை என்பதாலும், இந்த வைரசால் பாதிக்கப் பட்டவர்களிடையே இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதாலும் இது மிகவும் ஆபத்தானதாகக் கருதப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்