நியாயமான சந்தை நடத்தைகளுக்கான குழு - (Panel on Fair Market Conduct)
August 3 , 2017 2829 days 1199 0
Fair market Conduct எனப்படும், ‘நியாயமான சந்தை நடத்தைகள்’ தொடர்பான குழு ஒன்றினை இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (Securities and Exchange Board of India - SEBI) அமைத்துள்ளது. இந்தக் குழுவின் தலைவராக முன்னாள் மக்களவைச் செயலாளரும் , சட்டத்துறைச் செயலாளருமான டி.கே.விஸ்வநாதன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தற்போது நடைமுறையில் உள்ள இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் விதிமுறைகள் மற்றும் Fraudulent and Unfair Trade Practices(FUTP) எனப்படும் மோசடி மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் குறித்து பரிந்துரைப்பது இந்த குழுவின் முக்கிய பணியாகும்.
நிறுவனங்களை கையகப்படுத்தும் பொழுது , அவற்றின் விலை குறித்த இரகசியங்களை கையாள்வது மற்றும் நிறுவனத்தின் பணியாளர்கள் முக்கிய தகவல்களை பிறருக்கு விற்பதை தடுப்பதற்கான விதிமுறைகளை நிறுவனங்களின் சட்டத்தின் (Companies Act, 2013)படி இந்தக் குழுவானது வகுக்கும்.