TNPSC Thervupettagam

நியூக்ளிக் அமில சோதனை

March 6 , 2026 6 days 68 0
  • அரசியலமைப்பின் சரத்து 21 இன் கீழ் பாதுகாப்பான இரத்த மாற்றத்தை உறுதி செய்வதற்காக அனைத்து இரத்த வங்கிகளிலும் நியூக்ளிக் அமில சோதனை (NAT) கட்டாயமாக்கப்பட வேண்டுமா என்பதை இந்திய உச்ச நீதிமன்றம் ஆராய்ந்து வருகிறது.
  • NAT என்பது தானம் செய்யப்பட்ட இரத்தத்தில் உள்ள வைரஸ்களின் மரபணுப் பொருளை (DNA அல்லது RNA) கண்டறியும் ஒரு மூலக்கூறு சோதனையாகும்.
  • இதன் மூலம் மனித நோயெதிர்ப்பு குறைபாடு வைரஸ் (HIV), ஹெபடைடிஸ் B மற்றும் ஹெபடைடிஸ் C போன்ற தொற்றுகளை ஆரம்ப நிலையிலேயே அடையாளம் காண முடியும்.
  • இந்தியாவில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் நொதி சார்ந்த நோய் எதிர்ப்பு உறிஞ்சு சோதனை (ELISA) போன்ற சோதனைகளுடன் ஒப்பிடும்போது NAT "காத்திருப்புக் காலத்தை" குறைக்கிறது.
  • பாதுகாப்பான இரத்தமாற்றம் இந்திய அரசியலமைப்பின் சரத்து 21 இன் கீழ் வாழ்வதற்கான உரிமையின் ஒரு பகுதியாகும் என்று மனு வாதிடுகிறது.
  • இறுதி முடிவை எடுப்பதற்கு முன்பாக, செலவு, மாநில அளவிலான செயல்படுத்தல் மற்றும் சாத்தியக் கூறு குறித்த தரவுகளை நீதிமன்றம் கேட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்